ஆஷிமா நர்வால் தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படத்தில் நடித்தார். இவர் மாடலிங் துறையில் பணியாற்றி ‘மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா’, ‘மிஸ் இந்தியா குளோபல்’ போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார்.
மாடலிங்கில் சாதணை பெற்ற பின்பு பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு ஆஷிஷ் காந்தி நடிப்பில் வெளியான ‘நாடகம்’ எனும் படம் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானார்.
இப்படத்தில் இவர் தனது கவர்ச்சிகரமான நடிப்பை வெளிக்கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். இதைத்தொடர்ந்து ‘ஜெஸ்ஸி’ எனும் ஹாரர் படத்தில் நடித்து படம் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழில் வெளியான படம்தான் கொலைகாரன்.